ads 2

ads 1

மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி? பான், ஆதார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

 




மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி? பான், ஆதார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு! 


➽ ஆதார் மற்றும் பான் கார்டு இந்திய குடிமகன்களின் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. அடையாளத்தை அறிந்துகொள்வதற்கு ஆதார் அடையும், அதேசமயம் வரி செலுத்துதல் மற்றும் வங்கி கணக்குகளுக்கு பான் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் அத்தனை விவரங்களும் ஆதார் மற்றும் பான் அட்டையில் உள்ளது. எனவே இந்த 2 ஆவணங்கள் மட்டும் இருந்தாலே மோசடி செய்வது மிகவும் எளிய ஒன்றாகும்.


➽ தற்போது ஆதார் எண் வங்கி முதல் அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் எண் அல்லது பான் எண் ஆகியவற்றை வேறு யாராவது கேட்கும் பட்சத்தில் அவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.



🡺முன்பின் தெரியாதவர்களிடம் ஆதார் மற்றும் பான் அட்டை குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. ஒருவேளை கொடுக்கும் பட்சத்தில் அதனை அவர்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

🡺ஆதார் மற்றும் பான் அட்டை நகல் எடுக்கும் தருவாயில் மறக்காமல் மீண்டும் ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

🡺தனிப்பட்ட கணினி மற்றும் மொபைல் போன்களை தவிர வேறு எங்கும் ஆவணங்களின் டிஜிட்டல் நகலை வைத்திருக்க கூடாது.



🡺எப்பொழுதும் ஆதார் மற்றும் பான் அட்டைகளை கையில் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மாறாக  ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மொபைல் போனில் வைத்துக்கொள்ளலாம்.

🡺அதேபோல் சிபில் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என்பதை அவ்வப்போது சார்பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.




0 comments:

Post a Comment

Search This Blog