ஹெல்மெட் போடலனா 3 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து…! ” பின்னால் அமர்த்திருப்பவரும் கட்டாயம் அறிய வேண்டும்.. அரசு திடீர் அறிவிப்பு..!
நாட்டில் தற்போது 2 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும், 2 சக்கர வாகனத்தில், வேகமாக செல்லுவதும், போன் பேசியவாறு செல்வதும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்வதும் விபத்துக்கு வழிவகுக்கிறது. இதனால், நாட்டில் உயிர் பலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், தமிழ்நாட்டில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, புதுச்சேரியில் கடந்த 2017 ஆம் ஆண்டு வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அச்சட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது புதுச்சேரியில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகமாகி வருவதால், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் அதன் பின்னால் அமர்த்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் உத்தவிட்டுள்ளார்.
இதை மீறுவோருக்கு ரூ. 1,000/- அபராதம் மற்றும் 03 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment