வங்கியில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் – முழு விவரங்களுடன்!
இன்றைய கால கட்டத்தில் வங்கி என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் (Deposit) செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு (Savings) மற்றும் முதலீடு (Investment) போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. சில வங்கிகள் வழங்கும் சிறப்பு டெபாசிட் திட்டங்கள் குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
ஐடிபிஐ (IDBI) வங்கியில் உத்சவ் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு சிறப்பு விகிதத்தை வழங்கப்படுகிறது. 300 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் டெபாசிட்டுக்கு 7.05% வட்டி வழங்குவதாகவும் மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
375 நாட்களில் முதிர்ச்சியடையும் உத்சவ் டெபாசிட்டுகளுக்கு 7.1% வட்டி வழங்குவதாகவும் மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியில் 300 மற்றும் 400 நாட்களில் முதிர்வடையும் Ind Supreme டெபாசிட் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இதில் பொது மக்களுக்கு 7.05% வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டி விகிதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 400 நாட்களில் முதிர்ச்சியடையும் திட்டத்தில் பொது மக்களுக்கு 7.25% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியும், சூப்பர் மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி வழங்குகிறது.
0 comments:
Post a Comment