Bank பாஸ்புக் என்ட்ரி போட பேங்குக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை..!! IPPB வங்கி அறிமுகம் செய்த சுவாரஸ்யமான வசதி…!!
இந்தியாவில் டிஜிட்டல்(Digital) பயன்பாடானது அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை எட்டியுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு வங்கிகளும் தங்களுடைய இணையதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் (IPPB) தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, IPPB பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்(Mobile Banking) பயன்படுத்தி தங்கள் பாஸ்புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது . இதற்கு, முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் (Play Store) இருந்து IPPB பேங்க்-இன் மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
பின்னர், IPPB மொபைல் அப்ளிகேஷனில் உங்களுடைய லாகின் விவரங்களை பயன்படுத்தி உள்ளே நுழைந்து, டாஷ்போர்ட் (Dashboard) பகுதியில் உள்ள “பாஸ்புக்” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால் பாஸ்புக் “PDF வடிவில்” டவுன்லோட் செய்யப்படும். இதை தொடர்ந்து நீங்கள் எந்த தேதியில் இருந்து பரிவர்த்தனையை பார்க்க விரும்புகிறீர்களோ அந்த தேதியை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பரிவார்த்தைகளை காணலாம் .
மேலும், வங்கி கணக்கு பாஸ்புக்கை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளை தடுக்கவே இது போன்ற டிஜிட்டல் பாஸ்புக் முறையை அறிமுகம் செய்துள்ளதாக இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் (IPPB) தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment