அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு..இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ரூ. 2 லட்சம் கிடைக்கும்.! ” தமிழக அரசு அறிவிப்பு…நடைபெறும் இடம், நாள் அனைத்தும் உள்ளே”..!!
தமிழ்நாடு அரசு துறையில் பணியாற்றும் ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல உதவி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்க மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், அதே போல், அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் சார்ந்த கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய தலைப்புகளின் கீழ் தமிழக அரசு சார்பில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு பண்பாட்டுத்துறை வளர்ச்சி சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் 28-ம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி 3 சுற்றுகளாக நடைபெற உள்ளது. அதாவது, முதல் நிலை போட்டியில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு (Written Examination) நடத்தப்படும்.
இரண்டாம் கட்டமாக இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்களாக தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில், முதலாவதாக தேர்ச்சி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம், இரண்டாவதாக வெற்றி பெறுவோருக்கு ரூ.1.5 லட்சம் மற்றும் 3 வது பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி, இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இதர குழுக்களுக்கு ரூ.25,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment