TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே….வந்தாச்சு மீண்டும் ஒரு சூப்பர் அறிவிப்பு.!! ” TNPSC ஆணையம் தகவல் ..!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர், கிளார்க், தட்டச்சர் மற்றும் உதவி தட்டச்சர் முதலிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் 9ம் தேதியன்று “குரூப் 4” தேர்வை TNPSC ஆணையம் நடத்தியது. மேலும், இத்தேர்வுக்கு 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்த நிலையில், குரூப் 4 தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது.
மேலும், இத்தேர்வுக்கு ஒதுக்கப்பட்டிருந்த காலிப்பணியிடங்களை தொடர்ந்து அதிகரித்து வந்த TNPSC ஆணையம், தற்போது 559 பணியிடங்களை கூடுதலாக சேர்த்துள்ளது. இதன் மூலம், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
Click Here Official Notification released
0 comments:
Post a Comment